சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .
அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 12.5 லட்சத்தில் இருந்து ரூ. 13.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது .
வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ. 23.5 லட்சத்தில் இருந்து ரூ. 24.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது .