மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் தமிழகம் முழுவதும் ஒன்றிய வளமையங்களில் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கான பணி வரன்முறை மற்றும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கிட கோரியும் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு பயிற்றுவிக்க ஏதுவாக சிறப்பு பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கம் சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி நடைபயண போராட்டம் இன்று திருச்சியில் தொடங்கினர்.

நடைபயண போராட்டத்தினை பெண் விடுதலை கட்சி நிறுவனர் ஆசிரியை.சபரிமாலா தொடங்கி வைத்தார், தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகிலிருந்து நடைபயணமாக சென்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை போலீசார் கைது செய்தனர். சிறப்பு பயிற்றுநர்களின் கோரிக்கையை அரசு கவனம் கொண்டு நிறைவேற்ற முன்வர வேண்டும், செவி சாய்க்காத பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக வும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Translate »
error: Content is protected !!