மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை டார்டியோவில் உள்ள பாட்டியாலா மருத்துவமனை அருகே உள்ள 20 மாடி கமலா கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து புகை அதிகமாக உள்ளது. ஆனால் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.