இந்தியா – மியான்மர் எல்லையில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இருந்து 183 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மேலும் அப்பகுதியில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.