கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ஓஎஸ் 107 இல், ‘Save Desk for Later’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பக்கத்தை, சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த விரும்பினால், விட்ட இடத்தில் இருந்தே தொடர முடியும்.
இதனால், சில முக்கியமான ஆவணங்கள் தொலைந்துபோவதை தடுக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.