பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், பராமரிப்பு காரணங்களுக்காக ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35 ஆயிரத்து 26 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில், 41,483 ரயில்கள் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக இயக்கப்பட்டதாகவும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி மதிப்பிலான 120க்கும் மேற்பட்ட அதிகமான திட்டங்களை அடுத்த சில ஆண்டுகளில் நிறைவேற்ற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.