கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆய்வகங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் ஆய்வகங்களில் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.400 ஆகவும், காப்பீட்டுத் திட்டம் இல்லாதவர்களுக்கு ரூ.700 ஆகவும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய், என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.