சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் நடிகர் சூர்யா

68-வது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் இன்று மாலை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் நடிகர் சூர்யா.

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இந்த வருடம் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது

சிறந்த படம் (தமிழ்)- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த படம் – சூரரைப் போற்று (தமிழ்)

சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று) , அஜய் தேவ்கன் – (தன்ஹாஜி)

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த இயக்குநர் – சச்சிதானந்தன் (அய்யப்பனும் கோஷியும், மலையாளம்)

சிறந்த திரைக்கதை – ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

சிறந்த திரைக்கதை (வசனம்) – மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த அறிமுக இயக்குநர் – மடோன் அஷ்வின் (மண்டேலா)

சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும், மலையாளம்) சிறந்த துணை நடிகை – லட்சுமி ப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தமிழ்)

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) – ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் (அய்யப்பனும் கோஷியும், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் – சுமி (மராத்தி)

சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – அனிஷ் மங்கேஷ் கோசாவி (தக்-தக், மராத்தி)

சிறந்த ஒலிப்பதிவு – விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர் (மாலிக், மலையாளம்)

சிறந்த ஒளிப்பதிவு – சுப்ரதிம் போல் (அவிஜாட்ரிக், பெங்காலி)

சிறந்த பாடல் – தமன் (ஆலா வைகுந்தபுரமுலோ, தெலுங்கு)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – நச்சிகேட் பார்வ் & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி, இந்தி)

இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் இன்று மாலை
விருது வழங்கப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!