அதிக வைக்கும் வடிவேலு.. புதிய படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக்

நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24 வது புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் அவரை வேறு எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் அவர் சில ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இப்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் தலைப்பு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என வைத்துள்ளனர்.மேலும் வடிவேலு கோர்ட் சூட் அணிந்து கெத்தாக இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சுராஜ் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!