கோவையில் ரூ.211 கோடிக்கு சாலை பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்த பேட்டியில், “இது அதிமுக ஆட்சியில் நடந்திருக்க வேண்டிய பணிகள். அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகளுக்கான வேலைகள் நடந்ததே தவிர, அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடக்கவில்லை. ஈரோட்டில் நடைபெறவுள்ள நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்” என்றார்.