காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதற்கும், கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இடிக்கும் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு ‘293’ ஆக உள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.