பொய்களை பரப்பும் தானியங்கி இயந்திரமாக, அகிலேஷ் யாதவ் செயல்படுகிறார் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு ருசிகர சம்பவங்களும் அரசியல் மேடையில் அரங்கேறி வருகின்றன. அண்மையில் பொதுக்கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதே மக்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் இதனை கடுமையாக விமர்சித்து டுவிட் செய்துள்ள துணை முதல்வர் மவுரியா, அகிலேஷ் பொய்களின் இயந்திரம் என குறிப்பிட்டுள்ளார். அவரது ஆட்சியில் மின்சாரம், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் பல காணாமல் போனதாகவும், ஆனால் அவர் இப்போது, இலவச மின்சாரம் என மக்களை ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்…