மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: –
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் பலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். தடுப்பூசி செலுத்திருந்தாலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றவேண்டும். என அவர் கூறினார்.