திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள யூனியன் வங்கியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கணினி மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.