பழைய உலோகப் பொருட்களை வைத்து கார் தயாரித்த நபருக்கு புதிய கார் வழங்கிய ஆனந்த் மகேந்திரா

மராட்டியத்தைச் சேர்ந்த த்தாத்ராய லோகர் என்பவர் மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சொந்தமாக ஒரு காரை வடிவமைத்துள்ளார்.

தனது வீட்டில் இருந்த பழைய உலோகப் பொருள்கள் மற்றும் துணி, கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த காரைத் அவர் தயாரித்துள்ளார். அவர் இந்த காரை உருவாக்க 60,000 செலவழித்துளார். இது குறித்த செய்தி சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

இந்த செய்தியை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தத்தாத்ராய லோகரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

இது பற்றி அவர் பதிவு செய்த ட்விட்டர் பதிவில்,

இந்த கார் தெளிவாக விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை, ஆனால் நம் மக்களின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா இன்று மீண்டும் தத்தாத்ராய லோகர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,
தத்தாத்ராய லோகர் உருவாக்கிய வாகனம் விதிமுறைகளை மீறுவதால், உள்ளூர் அதிகாரிகள் விரைவில் அந்த வாகனம் ஓட்டுவதை தடைசெய்வர். நான் தனிப்பட்ட முறையில் அவருக்குப் பதிலாக ஒரு பொலேரோ காரை வழங்குவேன். ‘வளம்’ என்பது குறைந்த வளங்களைக் கொண்டு அதிகம் செய்வதைக் குறிக்கும் என்பதால், அவரது உருவாக்கம் நம்மை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!