முதல் நாளே இணையதளத்தில் வெளியானது “அண்ணாத்த”.. படக்குழுவினர் அதிர்ச்சி

ரஜினி நடிப்பில் தீபாவளி வெளியான படம் “அண்ணாத்த”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். தீபாவளி அன்று வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் இப்படம் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் “அண்ணாத்த” படத்தை திருட்டுத்தனமாக வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!