சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு நவம்பர் 15ம் தேதியும், குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு டிசம்பர் 15ம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.