ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதில் இரண்டு விமானிகள் காயமடைந்தனர்.
ஜம்மு,
ராணுவ ஹெலிகாப்டர் பத்னிதோப் என்ற இடத்தில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
இந்த சம்பவம் காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.