குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராணு அதிகாரி என தெரியவந்துள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மற்றும் 11 பேர் வீர மரணமடைந்தனர். மரணம் அடைந்தவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாய் தேஜ் என்பவர் தெரிய வந்துள்ளது.. விபத்தில் மரணமடைந்த சாய்தேஜ் கடந்த 2013 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியில் இருந்த அவர் தலைமை தளபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ள நிலையில் அவரது இழப்பு அவர்களது குடும்பத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.