அசோக் லேலண்ட் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டரில், 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து, 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை தயாரிக்க உள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு அசோக் லேலண்ட் பங்கு கிட்டத்தட்ட 6% உயர்ந்தது. இந்நிறுவனம், வளைகுடா நாடுகளில் 7000க்கும் மேற்பட்ட பேருந்துகளை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.