அசாம்: வாலிபரை விரட்டி தாக்கிய காட்டு யானை.. பதற வைக்கும் வீடியோ காட்சி

அசாம் மாநிலத்தில் 30 வயது நபர் ஒருவரை காட்டு யானை விரட்டி தாக்கிய தாக்கிய வீடியோ காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. துப்ரி மாவட்டத்தில் உள்ள தமர்ஹட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் 30-வயது நபர் ஒருவரை காட்டு யானை துரத்தி சென்றுள்ளது.

யானை விரட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த வாலிபரை யானை தும்பிக்கையால் கடுமையாக தாக்கியது. காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யானை காட்டுக்குள் துரத்தப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். காட்டு யானை அந்த வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!