ஜம்மு-காஷ்மீரில், ஒயின் ஷாப் மீது தாக்குதல் நடத்தி ஊழியர் ஒருவரை கொலை செய்ததாக 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராமுல்லா மாவட்டத்தில் அண்மையில் புதிதாக மதுபான கடை ஒன்று திறக்கப்பட்டது. இங்கு மதுபானம் வாங்குவது போல் நுழைந்த ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கையெறி குண்டை வீசி தப்பிச்சென்றார். இதில் கடை ஊழியர்கள் 4 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக, விசாரணை நடத்தி துப்பு துலக்கிய காஷ்மீர் போலீசார் 4 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது உதவியாளரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்த 5 துப்பாக்கிகள், 23 கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பயங்கரவாதிகள் பாரமுல்லாவில் மேலும் பல பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.