உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28.18 கோடி

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி,…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

முழு நேர வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக நாளை பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்..

பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை முடிந்து முழு நேர வகுப்புகள் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து பள்ளிக் கல்வித் துறையின் அலுவல ஆய்வுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, திருப்புதல்…

டிரைவர் தூங்கியதால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்தில் டிரைவர் தூங்கியதால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து மோதியது. இருப்பினும் பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று காலை அந்த பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிபாளையம் வழியாக…

தாயாரின் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நளினியின் தாயாரின் உடல்நலக்குறைவு காரணமாக இன்று முதல் 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு அனுமதி…

சுகாதார செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகத்திற்கு 2வது இடம்

நிதி ஆயோக் இன்று சுகாதார செயல்திறனுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இந்த தரவரிசைப்பட்டியல் 2019-20 காலகட்டத்தை கணக்கில்…

ஜனவரி 1ஆம் தேதி முதல் சிறார் தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்

இந்தியாவில் 15-18 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு கோவின் (CoWIN) செயலியில் ஜனவரி 1 முதல் பதிவு செய்யலாம் என கோவின் இயக்குனர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம், மேலும்…

தென் ஆப்பிரிக்கா – இந்திய டெஸ்ட் தொடர்: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் தாமதம்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ‘பாக்சிங்…

“ஜெய் சுல்தான்” பாடல் படைத்த புதிய சாதனை

கார்த்தி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு வெளியான படம் “சுல்தான்”. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்தார். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் படமான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும்…

சல்மான் கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்.?

சல்மான் கான் நடித்த டைகர் படத்தின் பாகம் 1 மற்றும் 2 சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைகர் படத்தின் 3ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…

Translate »
error: Content is protected !!