இரு மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற…

குடிபோதையில் ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்த கும்பல் கைது

சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் குடிபோதையில் ஊருக்குள் புகுந்த கும்பல், வாகனங்களின் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரை ஓடுகளை அடித்து நொறுக்கியது. இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தங்கமாபுரிப்பட்டினம் பகுதியில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் லாரியின் கண்ணாடிகளை…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோர…

தரமற்ற உணவு: விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்த தடை

விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நடப்பதால் அரசுப் பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது கண்டறியப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட உள்ளார்.

குடியரசு தினம் விழாவில் உத்தரகாண்ட் பாரம்பரிய தொப்பி, மணிப்பூர் மாநில துண்டுடன் வந்து அனைவரையும் அசத்திய பிரதமர் மோடி

குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் தலைப்பாகை அணிவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இது பலரால் கவனிக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு முன், தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி…

ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனைக்காக 18 முதல் 55 வயதுடைய 1240 பேரை தேர்வு செய்துள்ளது பைசர்

ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான சிறப்பு தடுப்பூசி பரிசோதனைக்காக 1240 பேரை பைசர் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தெரிந்துகொள்ள 18 முதல் 55 வயதுடையவர்களுக்கு சோதனை செய்யப்பட உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக,…

குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் 21 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு…

10, 11,12 வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்க பரிந்துரை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10, 11,12 வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிகள் திறக்கும் போது…

ஹங்கேரியில் இயற்கை சூழலில் இசையை ரசிக்கும் வகையில் நவீன அரங்கம்

ஹங்கேரியின் இயற்கையான சூழலில் இசையை ரசிக்கும் வகையில் அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் புடாபெஸ்டின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் ராட்சத காளான் போன்று காட்சியளிக்கும் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அரங்கின் மேற்கூரையில் சூரிய ஒளி உள்ளே செல்வதற்காக 100 ராட்சத ஓட்டைகள்…

Translate »
error: Content is protected !!