கடைகளில் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

 

கொடைக்கானலில் நகராட்சிக்கு வாடகை மற்றும் வரி பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரிச்சாலை மற்றும் நகரின் பல பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளை மாத வாடகை குத்தகைக்கு எடுத்தவர்கள் நீண்ட நாட்களாக வரி மற்றும் வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நகராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டும், நிலுவை தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நிலுவை தொகையை செலுத்தத் தவறியவர்களின் கடைகளை சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!