சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லாக்கில் எழுந்தருளி மதுரையிலிருந்து அழகர் கோயில் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.
சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பூப்பல்லாக்கில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. மல்லிகை, சம்மங்கி, ரோஜா, கனகாம்பரம், செவ்வந்தி, பச்சை ஆகிய பூக்களை கொண்டு பூப்பல்லாக்கில் கள்ளழகர் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான மண்டபப்படியில் இருந்து புறப்பட்டு, தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் ஆசி பெற்ற கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவுக்காக எப்ரல் 14 ஆம் தேதி மாலை அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார், 15 ஆம் தேதி எதிர்சேவையும், 16 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும், 17 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் நிகழ்வும், 18 ஆம் தேதி தசாவதாரம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று அதிகாலை புறப்பட்ட கள்ளழகர் நாளை பிற்பகல் அழகர் கோவிலை சென்றடைய உள்ளார். மேலும், மதுரையிலிருந்து அழகர்கோயில் வரை அமைக்கப்பட்ட மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.