கர்நாடகாவில் 8 முதல் 10 வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்ட நிலையில, பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் உள்ள ஓர் தனியார் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டது. பாதிப்பட்ட மாணவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசியர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்