குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து, மீண்டும் அதிகரித்து வரும் 30ம் தேதிக்கு பிறகு மழை குறைய தொடங்கி 3ம் தேதிக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தெற்கு அந்தமான் கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.