தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27, 28,29 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.