காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதல் விடியவிடிய காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவதால் அடுத்த 6 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.