சென்னையின் குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகையில் முழு கொள்ளளவு

சென்னையின் 5-வது குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் உபரி நீர் வழிந்தோடி வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன.சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுடன் ஐந்தாவது குடிநீர் ஆதாரமான 5-வது குடிநீர் ஆதாரமான கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கடந்த 2020 நவம்பரில் தொடங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

1100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் முழு உயரம் 36.61 அடி. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை இந்த நீர்தேக்கத்திற்கு நீராதாரமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு வருவதால் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதன் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியுள்ளதால் உபரி நீர் செல்லும் இடத்தில் தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது.ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் சேமிக்கப்படுகிறது.இந்த நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா கால்வாயில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இணைப்பு கால்வாய் வழியாக இந்த தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

மீண்டும் 19 கிலோ மீட்டர் ராட்சத குழாய்கள் பதித்து அந்த கால்வாயிலே விடும் அளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் தண்ணீர் குறையும் பட்சத்தில் இந்த நீர்த்தேக்கத்திலிருந்து பூண்டிரிக்கு அனுப்பப்பட்டு சென்னை குடிநீருக்காக அனுப்பப்படும் அந்த பணிகள் தயார் நிலையில் உள்ளன.

Translate »
error: Content is protected !!