நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

மருத்துவ படிப்பிக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழக அரசு கடுமையா எதிர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்படுத்து சிரமங்ககள் ஏற்படுகிறது என்றும், நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முயற்சிகளை மேற்கொள்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் நீர் தேர்வுக்கு எதிரான புதிய மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளார். நீட் விலக்கு மசோதாவின் ஒப்புதலுக்கு அழுத்தம் கொடுக்க ஆளுநரை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!