வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆணை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை சட்ட ரீதியாக பதிவு செய்திருத்தல் வேண்டும் என்றும், மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இந்த விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.