சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று (நவ-8) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியது, சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் சேவை துறையை தவிர அனைத்து துறைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். மேலும் தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.