மராட்டிய மாநிலத்தின் தானே மாநகராட்சியில் சாலை அமைக்க ‘பிட்கான் இந்தியா டெவலப்பர்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆனால், இந்த தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக இருந்துள்ளது. மேற்பார்வை பொறியாளர்கள் சாலைகள் தரமற்றவை என ஒப்பந்ததாரரை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி, ஒப்பந்ததாரர் தரமற்ற சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இது குறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என ஒப்பந்தக்காரருக்கு தானே மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஒப்பந்ததாரர் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், தரமற்ற சாலைகளை அமைத்த அந்த தனியார் நிறுவனத்திற்கு தானே மாநகராட்சி நிர்வாகம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.