நாட்டில் தினமும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் – மத்திய அரசு எச்சரிக்கை

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை 113 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் 11 மாநிலங்களில் பரவியுள்ளது. 

இதற்கிடையில், உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 93 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிதி ஆணையத்தின் (சுகாதாரத் துறை) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில்,

இங்கிலாந்தில் கொரோனா பரவும் அளவை பார்க்கும் போது, அதே அளவில் இந்தியாவில் பரவினால் நமது மக்கள்தொகையிடன் ஒப்பிடும்போது நாட்டில் தினமும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம். இங்கிலாந்தில் கொரோனா வேகமாக பரவுவதற்கு ஒமைக்ரான் காரணமாக இருக்கலாம்.தற்போது நிலவி வரும் அனைத்து சூழ்நிலைகளையும் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்றார்.

Translate »
error: Content is protected !!