புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 16 நபர்களுக்கும், காரைக்காலில் 4 நபருக்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், என மொத்தம் 21 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 100 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை 1,63,968 நபர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,66,044 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.