தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தீவிர சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இதேபோல் ஜனவரி 1ம் தேதி தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 1392 ஆக இருந்தது. ஜனவரி 17ம் தேதி கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்ந்து 4013 பேருக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள 40757 ஆக்சிஜன் படுக்கைகளில் 9.8% தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இவர்களில் சென்னையில் 1407 பேரும், கோவையில் 499 பேரும், மதுரையில் 291 பேரும், வேலூரில் 193 பேரும், சேலத்தில் 149 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.