இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இந்த பாதிப்பு 19 ஆயிரத்து 893 ஆக பதிவான நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 20 ஆயிரத்து 551க்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனாவுக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 600 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 36 லட்சத்து 95 ஆயிரத்து 835 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதன் வாயிலாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மொத்த எண்ணிக்கை 205 புள்ளி 59 கோடி டோஸாக உயர்ந்துள்ளது.