சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பழனியில் சமையல் கலைஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பழனி பேருந்து நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்தும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் சமையல் கலைஞர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், எனவே விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும், மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது போல சமையல் கலைஞர்களுக்கும் மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டரை தூக்கில் தொங்கவிட்டு வினோதமான முறையில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.