புதுச்சேரி சென்ற சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடலோர காவல் படையினர் கப்பலை திருப்பி அனுப்பினர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். ‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அந்த கப்பலில் காசினோ உள்ளிட்ட கேளிக்கை நிகழ்வுகள் அதிகம் உள்ளதால் அது புதுச்சேரியில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் என்று கூறி அதிமுக, காங்கிரஸ் மற்றும் சில அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்றது. ஆனால், அம்மாநில அரசு அனுமதி அளிக்காததை அடுத்து சொகுசு கப்பலை கடலோர காவல் படையினர் திருப்பி அனுப்பினர்.