செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில், காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
பல்வேறு வழக்குகளில் 800 கிலோ கஞ்சா, 14 கிலோ கேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்திருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் இந்த போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டன.