ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மத்திய அரசுத் துறை செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு மத்தியப் பணியாளர் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி அல்லது ஜனவரி 15ம் தேதிக்குள் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களது அசையா சொத்து விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த பதவி உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக, கடந்த ஆண்டுக்கான அசையா சொத்து விவரங்களை ஜனவரி 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!