தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21ம் தேதி முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.