நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. மறைமுகத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய சில இடங்களில் தி.மு.க- நிர்வாகிகள் பலர் போட்டியிட்டு பதவியேற்றனர்.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கூட்டணி தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவியேற்றுள்ள திமுக நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.