டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க். உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான இவர் சமீபத்தில் டைம்ஸ் இதழின் ஆண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் வருமான வரியை சரியாக காட்டுவதில்லை என சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக சிலர் கோஷங்கள் எழுப்பினர். அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் எலான் மஸ்க் தற்போது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் இந்த ஆண்டு ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வரித் தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில், அமெரிக்காவில் தனிநபர் ஒருவர் செலுத்தக்கூடிய அதிகபட்ச வரியாக இது இருக்கும்.
For those wondering, I will pay over $11 billion in taxes this year
— Elon Musk (@elonmusk) December 20, 2021