டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்… வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

டெல்லியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வை விரைவில் நடத்தி கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. போலீசாரின் வாகனங்களை மருத்துவர்கள் தாக்கி சேதப்படுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கம் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, முதுநிலை நீட் ஆலோசனையை விரைவுபடுத்தவும், காவல்துறை வன்முறைக்கு மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தவுள்ளது.

Translate »
error: Content is protected !!