காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ல் தேர்தல்…

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து, எல்ஏக்களாக வெற்றிப்பெற்ற  கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் எம்.பி  பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது காலியாக உள்ள அந்த பதவிகளுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், வேட்பாளர்கள் வரும் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 23ம் தேதியும்,  வேட்புமனுக்களை திரும்ப பெற 27ம் தேதி கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், வாக்குகளின் முடிவு மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதிக்கும் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

Translate »
error: Content is protected !!