ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பதினேந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேலசிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூபாய் நோட்டு களால் சன்னதி கருவரை முழுவதும் அலங்காரம் செய்யப்படும். பின் பொது மக்கள் வழிபட்டு செல்வர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின் காலையில், 1.2.5.10, 20, 50, 100, 200, 500, 2000, ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை முழுவதும் அலங்கரிக்கப்பட்டன.

பின்னர் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது இந்த ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்ய பட்டுள்ளதை பார்ப்பதற்கு ஏராளமாணோர் சென்றனர் இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் குப்புசாமி கூறுகையில், முதல் ஆண்டு ரூபாய் நாணயங்களால் அலங்காரம் செய்தோம். பின் ரூபாய் நோட்டுகளால் கருவரை முழுவதும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். இந்த ஆண்டு 15-ஆம் ஆண்டு என்பதால் நண்பர்கள் மூலம் ரூ. 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Translate »
error: Content is protected !!