மஸ்கட் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் இயந்திரக்கோளாறு

 

சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக, விமானம் நான்கரை மணி நேரம் தாமதமாகி 154 பயணிகள் சென்னை விமானநிலையத்தில் அவதிப்பட்டனா். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 8.30  மணிக்கு  154  பயணிகளுடன் விமானம் பயணிக்க தயாரக இருந்தது.

இந்த விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபாா்தபோது,  விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி  கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்தார். இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.

உடனடியாக விமானப் பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி மானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பயணிகளக்கு விமானம் தாமதம் என்றோ,எப்போது புறப்படும் என்றோ அறிவிக்கப்படவில்லை.இதனால் நீண்ட நேரமாக விமானத்தில் ஏற்றப்படாமல்,காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுப்பட்டனா்.அதன்பின்பு விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்படு,பயணிகளை அமைதிப்படுத்தினா்.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் விமானம் பழுது பார்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனா்.விமானம் இன்று அதிகாலை ஒரு  மணிக்கு 4.30 மணி நேரம் தாமதமாக சென்னையிலிருந்து மஸ்கட் புறப்பட்டு சென்றது. விமானி, விமானத்தில் ஏற்பட்ட திடீா் இயந்திர கோளாறு காரணமாக விமானம் நான்கரை மணி நேரம் தாமதம் ஆகி,154 பயணிகள் சென்னை விமானநிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

 

Translate »
error: Content is protected !!